வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்து ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Monday, June 26, 2023

வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்து ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்து ஆட்டோ வேன் ஆகிவற்றை இயக்கும்  ஓட்டுனர்கள் விபத்து ஏற்படாமல் கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும் என்ற  நோக்கத்தில் வாகன ஓட்டுனர்களின் கண் பார்வை குறைபாடு கண்டறியும் வகையில் வட்டார போக்குவரத்து அலுவலகமும் மிட்டவுன் ரோட்டரி சங்கமும் இணைந்து வட்டார போக்குவரத்து அலுவலர் ராம கிருஷ்ணன் மற்றும் ரோட்டரி சங்க தலைவர் குமார் ஆகியோர் தலைமையில்  வாணியம்பாடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

 இதில் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள்,ஆட்டோ ஓட்டுநர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் கண்களை பரிசோதனை செய்து கொண்டனர்.மேலும் கண்பார்வை குறைபாடு உள்ள ஓட்டுனர்களுக்கு இலவசமாக கண்கண்ணாடிகள் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment