நம்பியூர் ஒன்றியத்தில் 24 திருக்கோயில்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில் அறங்காவல் குழு உறுப்பினர்கள் நியமன ஆணை வழங்கும் விழா - MAKKAL NERAM

Breaking

Tuesday, July 18, 2023

நம்பியூர் ஒன்றியத்தில் 24 திருக்கோயில்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில் அறங்காவல் குழு உறுப்பினர்கள் நியமன ஆணை வழங்கும் விழா


ஈரோடு மாவட்டம்  நம்பியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 24 திருக்கோயில்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில் அறங்காவல் குழு உறுப்பினர்கள் நியமன ஆணை வழங்கும் விழா நம்பியூர் ஒன்றிய திமுக செயலாளர், நம்பியூர் பேரூராட்சி தலைவர் மெடிக்கல்.ப.செந்தில்குமார்  தலைமையில் அறங்காவலர் குழு மாவட்ட தலைவர் எல்லப்பாளையம் சிவக்குமார் , அறங்காவலர் குழு உறுப்பினர் கீதா கதிர்வேல் , இந்து அறநிலையத்துறை தாலுகா ஆய்வாளர் ஹரிஹரன்  ஆகியோர் முன்னிலையில் நம்பியூர் சிவசக்தி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி

No comments:

Post a Comment