என்.எல்.சி. நிறுவனத்திற்கு எதிராக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் கைது..... காவல்துறை வாகனத்தை அடித்து நொறுக்கிய பாமகவினர்.... - MAKKAL NERAM

Breaking

Friday, July 28, 2023

என்.எல்.சி. நிறுவனத்திற்கு எதிராக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் கைது..... காவல்துறை வாகனத்தை அடித்து நொறுக்கிய பாமகவினர்....

 


கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. என்எல்சி நிறுவனத்தின் பிரதான நுழைவாயில் முன்பு பாமக கட்சியினர் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த நிலையில், என்.எல்.சி. நிறுவனத்திற்கு எதிராக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை போலீசார் கைது செய்தனர். மேலும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் உள்ளிட்டோரை கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றினர். அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து பாமகவினர் காவல்துறை வாகனத்தை அடித்து நொறுக்கினர். இதனால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment