நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திற்கு நிலம் எடுப்பது தொடர்பான பிரச்சனையில் என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்திய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாமக்கல் மேற்கு மாவட்ட பாமக சார்பில் மாவட்ட செயலாளர் சுதாகர் தலைமையில் திருச்செங்கோடு பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது இதில் 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் சுதாகர் அவர்கள் தலைமை வகித்தார். மாநில உழவு பேரியக்கம் தலைவர் பொன் ரமேஷ் மாவட்ட அமைப்பு தலைவர் செந்தில், திருச்செங்கோடு நகர செயலாளர் பூக்கடை சுரேஷ் சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில், மாவட்டத் துணைச் செயலாளர் கோடீஸ்வரன், குமாரபாளையம் நகர செயலாளர் கோவிந்தன் செந்தில் பசுமைத்தாயகம் மாவட்ட செயலாளர் ராமசாமி மாவட்டத் துணை தலைவர் சௌந்தரம் மாவட்ட இளைஞர் அணி தலைவர் விமல் மாவட்ட அன்புமணி தம்பிகள் படை செயலாளர் கோபிநாத் அருள் அருண் மாதையன் வேல்முருகன் கௌதம் கனகவேல் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ஜெ.ஜெயக்குமார் 9942512340
நாமக்கல் மாவட்டம்
No comments:
Post a Comment