ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை கீழ்பாதி ஸ்ரீ சந்தை தோப்பு ஸ்ரீமுத்துமாரியம்மன் தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்து பாளையங்கோட்டை கீழ்ப்பாதி ஸ்ரீ சந்தை தோப்பு முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் அம்மாவாசை அன்று காப்பு கட்டப்பட்டது அதனைத் தொடர்ந்து பத்து நாட்கள் பாரத சொற்பொழிவு அம்மன் பொறப்பு வளர்ப்பும் அம்மன் வீதி உலாவும்  நடைபெற்றது ஆடி மூன்றாம் வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் அகலம் குளக்கரை சென்று சக்தி கரகம் சோடிக்கப்பட்டு பக்தர்கள் செடல் அணிந்து கடைவீதி வழியாக சுற்றி வந்து ஆலயத்துக்கு வந்தனர் பின்னர் அம்மனுக்கு  தீபாராதனை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி அளவில் தீக்குழியில் தீ மூட்டப்பட்டது 4 மணி அளவில் தச்சம் குளக்கரை சென்று பக்தர்கள் நீராடி விட்டு அக்னி கரகம் தால் கரகம் ஜோடிக்கப்பட்டு பக்தர்களுக்கு கையில் காப்பு கட்டப்பட்டது நான்கு வீதிகளும் சுற்றி வந்து பக்தர்கள் தீக்குழியில் இறங்கி தீமிதித்தனார் மற்றும் மாரியம்மனுக்கு  தீபாரதனை காண்பிக்கப்பட்டது இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் பக்தர்களும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments