• Breaking News

    ஸ்ரீமுஷ்ணம் அருகே கானூர் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் 34 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா


    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே கானூர் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் ஆடி மாத விழாவானது கடந்த சில நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதல் உடன் ஆரம்பித்தது. அதன்படி தினமும் பல்வேறு வழிபாடுகள் கிராம மக்களால் நடைபெற்று வந்த நிலையில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் 34 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக கோவில் அருகில் உள்ள பெரிய குளத்தில் இருந்து தீமிதி விழாவுக்கான கரகம் ஜோடித்தல் நடைபெற்று பின்னர் கிராம முக்கியஸ்தர்களுடன் தீமிதி கரகம் பம்பை உடுக்கை முழங்க முக்கிய வீதிகளின் வழியாக வருகை தந்து எல்லை தெய்வங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு தீமிதி மிதிக்கும் இடத்தை வந்தடைந்தது. பின்னர் ஆயிரக்கணக்கான கிராம மக்கள் சூழ அம்மன்  கோஷம் முழங்க தீமிதி விழாவில் நேர்த்தி கடனோடு பக்தர்கள் பலரும் தீக்குழியில் இறங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். பின்னர் தீமிதி திருவிழாவில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார் ஸ்ரீ முத்துமாரியம்மன் . விழா மிகவும் சிறப்பாகவும் இதுவரை இல்லாத அளவில் ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்கவும் நடைபெற்றதால் விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கிராம முக்கியஸ்தர்கள், பக்தர்கள் செய்திருந்தனர் அவர்களுக்கும் இந்த விழாவில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

    No comments