பிரதமர் மோடி பிறந்த தினத்தை முன்னிட்டு அகில இந்தியா முழுவதும் தூய்மைக்கான போட்டி 2.0 துவக்கம்
பிரதமர் மோடியின் 73வது பிறந்த தினத்தை ஒட்டி இன்று தொடங்கி அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி வரை அகில இந்தியா முழுவதும் தூய்மைக்கான போட்டி 2.0 என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு நகராட்சி சார்பில் மலையடி குட்டை பகுதியில் இருந்து பேரணி நடந்தது .பேரணியை நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு தொடங்கி வைத்து குப்பைகளை கூட்டிப் பெருக்கி தூய்மை பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி துப்புரவு அலுவலர் வெங்கடாசலம் பகுதி நகர மன்ற உறுப்பினர் ராதா சேகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் தூய்மை பணிக்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த பேரணியில் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ஜெ.ஜெயக்குமார் 9942512340
நாமக்கல் மாவட்டம்
No comments