• Breaking News

    நடிகை நயன்தாரா பெயரில் பண மோசடி

     


    பெண்கள் மாதவிடாய்க்கு பயன்படுத்தும் நாப்கின்யை வைத்து பிரபல நடிகை நயன்தாரா பெயரை சொல்லி பணம் வாங்கிக் கொண்டு கெளதம் என்பவர் குடும்பத்துடன் தலை மறைவு சம்பந்தமாக ஈரோடு எம்ஜிஆர் நகர்,சூலையைச் சேர்ந்த வீரக்குமார் மகன் நிசாத்குமார் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் அளித்துள்ள புகார் மனு விபரம் வருமாறு.நான் மேலே கண்ட முகவரியில் குடும்பத்துடன் வசித்து டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறேன். நான்ஈரோடு,பெரியசேமூர்ரை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரின் மகன் கௌதம் என்பவர் தன்னுடைய தகப்பனார் தமிழ்ச்செல்வன் பெண்கள் மாதவிடாய்க்கு பயன்படுத்தும் விஸ்பரை தன் தகப்பனார் யூடியூபில் விளம்பரம் செய்ததை (FEMI) செமி ஹெல்த் கேர் நிறுவனத்தை தமிழ் திரையுலக பிரபல நடிகை நயன்தாராவுடன் பார்ட்னராக ஒப்பந்தம் போட்டுள்ளதாகவும் என்னிடம் பலமுறை கௌதம் தெரிவித்தார். அவருடைய தகப்பனார் தமிழ்ச்செல்வன் நிறுவனத்திற்கு பிரபல பேச்சாளர் ஈரோடு மகேஷ் என்பவர் இவர்களின் பெண்களின் மாதவிடாய்க்கு பயன்படுத்தும் நாப்கின்னை அறிமுகம் செய்ததாக என்னிடம் பல புகைப்படங்களை என்னிடம் காட்டினார். 

    அது இல்லாமல் ID ஐ டி என்கிற முறையில் தங்கள் நிறுவனத்தின் மூலம் பணம் போட்டால் தங்களுக்கு வருமானம் இரட்டிப்பாக இருக்கும் என்று கௌதம் என்னிடம் விரிவாக விளக்கம் செய்தார். மேலும் கெளதம் சொன்னதை எல்லாம் நான் youtube பார்த்ததில் கௌதமனின் தந்தை தமிழ்ச்செல்வன் மற்றும் கோமதி என்பவர் youtube இல் பணம் கிடைப்பதற்காக விளம்பரமாக பேசியுள்ளார் யூட்யூபில் பார்த்தது உண்மைதான் என்று நம்பி நான் கௌதமிடம் பணம் ஒன்றை லட்சத்தை கொடுத்து ஒரு முதலீட்டராக சேர்ந்து கொள்ள கௌதமிடம் தெரிவித்தேன். கௌதம் என்னிடம் ஒன்றரை லட்சத்தை வாங்கிக் கொண்டு தன்னுடைய பெயரில் D ஐடி போட்டுக் கொள்வதாகவும் மாத வருமானத்தை என்னிடம் தந்து விடலாம் கூறி கௌதம் என்னிடம் பணம் பெற்றுக் கொண்டு. பணம் என்னிடம் பெற்றதில் இருந்து தொடர்ந்து மூன்று மாதங்களாக கௌதம் எனக்கு மாதம் 20 ஆயிரம் பணம் கொடுத்தார். 

    கடந்த 02.09.2023 சனிக்கிழமை கௌதமுக்கு நான் போன் செய்த போது அவர் நான் திங்கட்கிழமை மாலை ஈரோடு வந்து விடுவேன் நானும் எனது தகப்பனார் தமிழ்ச்செல்வன் பிரபல நடிகை நயந்தாராவை பார்க்க சென்றுள்ளோம் என்று தெரிவித்தார். கடந்த 10 தினங்களாக பணம் கேட்டு கௌதமுக்கு இந்த எண்ணுக்கு (7/548845498) பலமுறை போன் செய்தும் கௌதம் போன் எண் சுவிட்ச் ஆப்பில் உள்ளது. 

    கௌதம் எங்கு இருக்கிறார் என்று எனக்கு அறிமுகப்படுத்திய நபர்கள் மூலம் விசாரித்ததில் கெளதம் போன் சுவிட்ச் ஆப் செய்து விட்டு ஊரை விட்டு தானும் தன் தகப்பனார் தமிழ்செல்வம் மாயமாய் விட்டார் என்று எனக்கு தகவல் வெளியானதை கண்டு அதிர்ச்சி அடைந்து தங்களிடம் புகார் கொடுத்து என் பணத்தை ஏமாற்றி வரும் கௌதம் மீது தக்க நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.என அந்த புகார் மனுவில் உள்ளது.

    No comments