கணவனை கொன்று செப்டிக் டேங்கில் மறைத்த மனைவி 9 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார் - MAKKAL NERAM

Breaking

Wednesday, September 13, 2023

கணவனை கொன்று செப்டிக் டேங்கில் மறைத்த மனைவி 9 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கினார்

 


சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கம்பன் தெருவில் உள்ள சீராளன் என்பவர் வீட்டின் செப்டிக் டேங்கில் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு ஆணின் சட்டை மற்றும் மனித எலும்புக் கூடு உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட கணவனைக் கொலை செய்துவிட்டு உடலைச் செப்டிக் டேங்கில் வீசிய மனைவி 9 ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்டார். 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கம்பன் தெருவில் உள்ள சீராளன் என்பவர் வீட்டின் செப்டிக் டேங்கில் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு ஆணின் சட்டை மற்றும் மனித எலும்புக் கூடு உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது  இந்த வீட்டில் 9 ஆண்டுகளுக்கு முன்பு ஆம்னி பேருந்து டிரைவரான பாண்டியன், அவரது மனைவி, மகள், மகனுடன் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். அப்போது பாண்டியன் குடிபோதையில் வந்து மனைவி சுகந்தியிடம் தகராறில் ஈடுபட்டு அடித்து உதைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுகந்தி கணவரைத் தள்ளியபோது  தலை சுவற்றில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதனையடுத்து பாண்டியனின் உடலைச் சுகந்தி யாருக்கும் தெரியாமல் செப்டிக் டேங்கில் போட்டுள்ளார். பின்னர், கணவர் வெளியூர் சென்று விட்டதாகக் கூறி குடும்பத்தினர் வீட்டைக் காலி செய்து சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து  9 ஆண்டுகளுக்குப் பிறகு சுகந்தியை கைது செய்த போலீசார் தேவகோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைக்கப்பட்டார்.

No comments:

Post a Comment