திருவண்ணாமலை அருகே விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்தில் போலீசாருக்கும் விழா குழுவினருக்கும் இடையே தள்ளு முள்ளு - MAKKAL NERAM

Breaking

Monday, September 18, 2023

திருவண்ணாமலை அருகே விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்தில் போலீசாருக்கும் விழா குழுவினருக்கும் இடையே தள்ளு முள்ளு

 


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்தின் போது போலீசாருக்கும் விழா குழுவினருக்கும் இடையே ஏற்றப்பட்ட தள்ளு முள்ளால்  சந்திரன் என்பவர் பலத்த காயம் அடைந்து செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மணிக்கு அனுப்பி வைத்த நிலையில் காவல்துறையை கண்டித்து தளவநாயக்கன்பேட்டை பகுதி இளைஞர்கள் செங்கம் - போளூர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளானது.இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட விழா குழுவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியல் கைவிட்டு கலைந்து சென்றனர்.


மக்கள் நேரம் செய்தி செங்கம் தாலுக்கு செய்தியாளர் எஸ் சஞ்சீவ்

No comments:

Post a Comment