ஆந்திரா ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு - MAKKAL NERAM

Breaking

Monday, October 30, 2023

ஆந்திரா ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு

 


நேற்று மாலை ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் ஹவுரா-சென்னை வழித்தடத்தில் விசாகப்பட்டினம் மற்றும் பலாசா இடையே இரண்டு பயணிகள் ரயில்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தை அடுத்து 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், 22 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.



ரயில் சிக்னல் இல்லாததன் காரணமாக அலமண்டா மற்றும் கண்டகப்பள்ளி ரயிலானது தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது விசாகப்பட்டினம் – ராய்காட் பயணிகள் ரயில் பின்னால் இருந்து மோதியது. இந்த விபத்தில் 3 பெட்டிகள் தடம் புரண்டன.



இந்த விபத்தில் நேற்றுவரை 9 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டு இருந்த நிலையில், தற்போது  பலி எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது என விஜயநகர மாவட்ட ஆட்சியர் நாகலட்சுமி தெரிவித்துள்ளர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து  மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிப்பதாக ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்தவர்களுக்கு தலா 2.5 லட்சமும், சிறிய காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் தொகை நிவாரணமும் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு கூடுதலாக 2 லட்சம் ரூபாய் வழங்கவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல ஆந்திர மாநில அரசு சார்பிலும் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.


விபத்து குறித்து விசாரணை செய்ய ரயில்வே துறை சார்பில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மனித பிழையின் காரணமாக அதாவது ரயில்வே ஊழியர் தவறான சிக்னல் காணிபித்தோ. அல்லது ரயில் குறித்து சிக்னல் தேவிக்காத காரணத்தால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது இன்னும் உறுதியான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

No comments:

Post a Comment