இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பையின் 5 வது போட்டி சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.ரோஹித் ஷர்மா தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய பேட்டர் ஷுப்மன் கில் பங்கேற்கவில்லை.ஷுப்மான் கில்லுக்கு பதிலாக இஷான் கிஷன் தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் ஷர்மாவுடன் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா, இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் , ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, கிளென் மேக்ஸ்வெல், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஆடம் ஜம்பா.
No comments:
Post a Comment