தூத்துக்குடியில் மீன்பிடி தொழிலாளர்கள் 5-வது நாளாக போராட்டம் - MAKKAL NERAM

Breaking

Saturday, October 14, 2023

தூத்துக்குடியில் மீன்பிடி தொழிலாளர்கள் 5-வது நாளாக போராட்டம்

 


தூத்துக்குடி மீன்பிடி துறைமுக விசைப்படகு தொழிலாளர்கள் வாரத்தில் 6 நாட்கள் மீன் பிடி தொழிலுக்கு செல்ல வேண்டும் என உரிமையாளர்களிடம் கோரிக்கை வைத்து உள்ளனர். ஆனால் விசைப்படகு உரிமையாளர்கள் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே மீன்பிடித் தொழிலுக்கு செல்ல முடியும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.


இதனால் தொழிலாளர்கள், உரிமையாளர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 245 விசைப்படகுகளும் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.


மீன்பிடி தொழிலாளர்களின் போராட்டம் 5-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment