பயணிகள் முன்பதிவு இல்லை: நாகை- இலங்கை இடையிலான கப்பல் போக்குவரத்து இன்று ரத்து - MAKKAL NERAM

Breaking

Sunday, October 15, 2023

பயணிகள் முன்பதிவு இல்லை: நாகை- இலங்கை இடையிலான கப்பல் போக்குவரத்து இன்று ரத்து

 


நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு 2 முறை தள்ளி வைக்கப்பட்டது


இதனை தொடர்ந்து, நேற்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை காணொலிக்காட்சி மூலம் டெல்லியில் இருந்தபடி பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.


இந்த நிலையில், நாகை-இலங்கை இடையே நேற்று தொடங்கப்பட்ட சொகுசு கப்பல் போக்குவரத்து இன்று ரத்துசெய்யப்பட்டு உள்ளது. போதிய பயணிகள் முன்பதிவு செய்யாததால் சொகுசு கப்பல் போக்குவரத்து சேவை ரத்துசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நாளை காலை மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment