• Breaking News

    சாத்தூர் அருகே மர்ம காய்ச்சல் செய்தி எதிரொளியாக சுகாதார துறை சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது


    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா மேட்டமலை கிராமத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தொடர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 10 நபர்களுக்கு மேல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில்,இது தொடர்பாக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியான நிலையில்,சுகாதாரத்துறை ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலான சித்தா மற்றும் அலோபதி மருத்துவ குழுவினர்,பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து மாத்திரை மற்றும் நிலவேம்பு கசாயம் ஆகியவற்றை  பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.


     மேலும் சுகாதாரத்துறை ஆய்வாளர் நாகராஜன் கூறுகையில் மாதம் இருமுறை இந்த கிராம பகுதிகளில் சுழற்சி முறையில் மருத்துவ முகாம் நடைபெறும் எனவும் கொசுக்கள் உற்பத்தி ஆகாத வண்ணம் புகை மருந்து அடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு சுகாதாரம் தொடர்பான  விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார்.

    No comments