• Breaking News

    ஒரு ஊருக்கு இரண்டு தலைவர்கள்: பள்ளிவாசல் தேர்தலில் சமமாக ஓட்டு வாங்கியதால் வினோத முடிவு


    மயிலாடுதுறை அருகே 250 வருடம் பாரம்பரியமிக்க வடகரை ஜாமியா மஸ்ஜித் ஜமாத் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல், வக்புவாரிய அதிகாரிகள் முன்னிலையில் தலைவர் போட்டியில் இரண்டு பேரும் சமமான வாக்குகளை பெற்றதால் ஒரு பள்ளிவாசலுக்கு இரண்டு தலைவர்களும் செயல்படுவது என்று வினோத முடிவு ஏற்பட்டது:-


    மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த வடகரை பழமை வாய்ந்த ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் அமைந்துள்ளது. 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த பள்ளிவாசலில் முத்தவல்லி எனப்படும் தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நேற்று நடைபெற்றது.இன்றைய பிற்பகல் தொழுகை முடிந்த பின்பு வக்பு வாரிய அதிகாரிகள் முன்னிலையில் தேர்தல் துவங்கியது.ஊர் வரி செலுத்தும் 250 பேர் வாக்களிக்க உள்ள தகுதி வாய்ந்த நிலையில், நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு அமைதியான முறையில் துவங்கியது. இரண்டு தலைவர் முத்தவல்லி வேட்பாளர்கள் மற்றும் 24 பேர் துணைத் தலைவர், செயலாளர் பொருளாளர் உள்ளிட்ட 12 பதவிகளுக்கு போட்டியிட்டனர் இதில் பதிவான 250 வாக்குகளில் இரண்டு வாக்குகள் செல்லாத நிலையில் இரண்டு தலைவர் வேட்பாளர்களும் 123 வாக்குகள் சரிசமமாக பெற்றனர் அதன் பிறகு அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்ற இரண்டு பேரும் சேர்ந்து ஊர் தலைவர்களாக நிர்வாகம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது இதனை அடுத்து தேர்தல் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது ஒரே ஊருக்கு இரண்டு பேர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

    No comments