ஈரோடு மாவட்டம்,கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் ஸ்ரீ ஐய்யனார் திருக்கோவிலுக்கு சித்தர்கள் வருகை - MAKKAL NERAM

Breaking

Wednesday, October 11, 2023

ஈரோடு மாவட்டம்,கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நம்பியூர் ஸ்ரீ ஐய்யனார் திருக்கோவிலுக்கு சித்தர்கள் வருகை


ஈரோடு மாவட்டம் ,  நம்பியூர் அருகே உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ ஐய்யனார் திருக்கோவிலுக்கு நேற்று சித்தர்கள் வருகை புரிந்து சிறப்பு தரிசனம் செய்தனர்.அவர்களை ஸ்ரீ ஐயனார் கோவில் தர்மகர்த்தா லோகு சிறப்பு மரியாதை செய்து வரவேற்றார்.

ஸ்ரீ ஐய்யனார் திருக்கோயில்  கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக கருங்கல் கொண்டு திருப்பணி நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் கிருஷ்ணகிரி மௌன சித்தர் திருநள்ளாறு ருத்தர சித்தர் சுசிந்தரம் வரதராஜ் சித்தர் மற்றும் சிவனடியார்கள் ஆகியோர் கலந்து கொண்டு ஸ்ரீ ஐய்யனாரை சிறப்பு வழிபாடு செய்தனர்.

சிறப்பு வழிபாட்டினை ஐய்யனார் கோயில் தர்மகர்த்தா லோகு அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.மேலும் சிறப்பு வழிபாட்டின் போது நம்பியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சித்தர்களிடம் ஆசி பெற்று ஸ்ரீ ஐயனாரை  வழிபட்டுச் சென்றனர். 


மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி .

No comments:

Post a Comment