சொத்து கேட்டு மிரட்டிய மகள்..... மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதி தர்ணா..... - MAKKAL NERAM

Breaking

Tuesday, October 10, 2023

சொத்து கேட்டு மிரட்டிய மகள்..... மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதி தர்ணா.....

 


நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. அப்போது வேதாரண்யம் கோவில்பத்து கிழக்காடு பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பாலகிருஷ்ணன் (5) என்பவர் தனது மனைவி ஆண்டாளுடன் ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.



பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது வயதான தம்பதி கொடுத்த புகார் மனுவில், தாங்கள் இருவரும் மகள்வழி பேரன் கட்டிய வீட்டில் வசித்து வருவதாகவும், வாழ்வாதாரத்திற்காக காய்கறி வியாபாரம் செய்து வருகிறோம் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.


இந்நிலையில், தங்களது இளைய மகள், அவரது கணவர் ஆகிய இருவரும் சேர்ந்து தங்களிடம் சொத்தை கேட்டு பாலகிருஷ்ணனை தாக்கியும், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வருகின்றனர் என்று குற்றம்சாட்டியுள்ளனர்.


இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், எனவே இதுதொடர்பான உரிய விசாரணை நடத்தி 2 பேரும் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.


மனுவை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தம்பதியிடன் உறுதி அளித்தனர். இதையடுத்து வயதான தம்பதி இருவரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

No comments:

Post a Comment