உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் ஜனவரி மாதம் 14ஆம் தேதி மகா சங்கராந்தி தினத்தன்று கோவில் திறப்பு விழா தொடங்கப்பட உள்ளது. 10 நாட்கள் இந்த விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவுக்கு பிரதமர் மோடி வருவார் என ராமர் கோவில் கட்டுமான குழு தலைவர் நிருபேந்திர மிஸ்ரா கூறியிருந்தார். அதன்படி பிரதமர் மோடிக்கு ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு வரக்கோரிஅழைப்பு விடுக்கப்பட்டது.
இது குறித்து தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிடுகையில், இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வை காண்பது எனது அதிர்ஷ்டம் என பதிவிட்டு தான் கோவில் திறப்பு விழாவுக்கு வருவதை பிரதமர் மோடி உறுதி செய்தார்.
No comments:
Post a Comment