காதல் திருமணம் தான் செய்துகொள்வேன்- நடிகை ஸ்ரீ திவ்யா பேட்டி - MAKKAL NERAM

Breaking

Monday, October 30, 2023

காதல் திருமணம் தான் செய்துகொள்வேன்- நடிகை ஸ்ரீ திவ்யா பேட்டி

 


தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீ திவ்யா. இவருக்கு இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஸ்ரீ திவ்யாவுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உருவானது என்றே கூறலாம். இந்த திரைப்படத்தை தொடர்ந்தும் ஸ்ரீ திவ்யா ஒரு சில படங்களில் நடித்தார். ஆனால், அவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமலே போனது.



பிறகு சில ஆண்டுகளாக சினிமாவில் எந்த படங்களிலும் நடிக்காமல் நடிகை ஸ்ரீ திவ்யா சினிமாவை விட்டு காணாமல் போனார் என்றே கூறலாம். இதனையடுத்து ஸ்ரீ திவ்யாவுக்கு விரைவில் திருமணம் என்றும் அவர் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் இணையவுள்ளதாக தகவல்கள் பரவியது.



இதனால் தான் ஸ்ரீ திவ்யா சினிமாவில் தொடர்ச்சியாக படங்களில் நடிக்காமல் இருந்ததாகவும் தகவல்கள் பரவியது. இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை ஸ்ரீ திவ்யா தன்னுடைய திருமணம் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர் ” எனக்கு திருமணம் செய்து கொள்ள ஆசை இருக்கிறது.



கண்டிப்பாக நான் திருமணம் செய்துகொள்வேன். கண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்துகொள்வேன். திருமணம் நடைபெறும் முன்னதாக ரசிகர்களுக்கு அறிவித்துவிட்டு தான் நான் திருமணம் செய்துகொள்வேன்” எனவும் நடிகை ஸ்ரீ திவ்யா தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் ஸ்ரீ திவ்யாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.


மேலும், நடிகை ஸ்ரீ திவ்யா நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். அதன்படி, அவர் தற்போது ஸ்ரீ திவ்யா விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ரைடு எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment