தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.280 குறைவு - MAKKAL NERAM

Breaking

Monday, October 30, 2023

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.280 குறைவு

 


தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஒருநாள் உயர்வதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.



அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, ரூ.45,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.5,735-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.78.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.78,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment