மேஷம் ராசிபலன்
யாரோ ஒருவர் உங்களுக்குத் துரோகம் இழைத்திருக்கலாம், அவர்களின் நடத்தையால் நீங்கள் மிகவும் வேதனைப்பட்டு இருக்கலாம் அல்லது அதிர்ச்சி அடைந்து இருக்கலாம் . ஆனால், இந்த துரோகத்திலிருந்து நீங்கள் நன்கு பாடம் கற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, அந்த துரோகத்தை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டே இருக்கக் கூடாது. நீங்கள் கஷ்டங்களை எதிர்கொள்ளும்போது உங்கள் குடும்பமே உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இன்று உங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தத் தயங்க வேண்டாம். ஒருவேளை அந்த நபருக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்க நீங்கள் விரும்பினால், அந்த வாய்ப்பை வழங்குங்கள், ஆனாலும், மனக்கண்ணால் தொடர்ந்து அவரை கண்காணித்துக் கொண்டே இருங்கள்.
ரிஷபம் ராசிபலன்
எல்லா தவறுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, இன்றைய நாளை உங்களது குடும்பத்திற்காக அர்ப்பணியுங்கள். உங்களது குடும்பதிற்காக செலவிடும் நேரத்தின் அளவை குறைக்கக்கூடிய விஷயங்களை, அனுமதிக்கும் மனநிலையில் இல்லாதிருங்கள். வரவிருக்கும் வாரத்தில் உங்களை சரியான பாதையில் நிலைநிறுத்தக்கூடிய விஷயங்களைத் திட்டமிட்டு ஒழுங்கமைக்க, இன்று சில நிமிடங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். உங்களது வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்தவர்களைப் பாராட்டுங்கள். சிந்தனைமிக்க செய்கைகளால் அவர்களை ஆச்சரியப்படுத்துவது, உங்களது அன்பினை அவர்களுக்குக் காண்பிப்பதற்கான ஒரு நல்வழியாகும்.
மிதுனம் ராசிபலன்
புதிய எண்ணங்கள் உங்கள் வாழ்க்கை பாதையில் வந்து செல்லும். புதிய நண்பர்களை உருவாக்க உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுடன் நீண்டநாட்களாகத்தொடர்பில்லாத,அன்புக்குரியவர்களைத்தொடர்பு கொண்டு பேசுங்கள். கடந்த காலத்தைப்பற்றிச்சிந்திக்கவும். உங்களுக்கு ஏற்பட்ட நன்மைகளை எண்ணிப் பார்க்க நேரம் ஒதுக்குங்கள்.உங்களைச்சிக்கலில் ஆழ்த்த விரும்பும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். சிலர்உங்களுக்குப்பொய்யான நம்பிக்கையை அளிப்பார்கள்.அதைக் கண்டு பயப்படாதீர்கள்.உங்களுக்குத்தேவையானதை மட்டுமே தேர்வு செய்து, அதற்கு ஏற்ப உங்கள்செயல்களைச்செய்யத் தொடங்குங்கள்.
கடகம் ராசிபலன்
இன்று, நீங்கள் சலிப்படைந்தது போன்று உணர்கிறீர்களா? உங்கள் வாழ்வை எப்படி மேம்படுத்துவது என்று யோசித்து வருகிறீர்கள். இதை யோசிக்க இப்போதே சிறந்த நேரமாக இருக்கும். மற்றவர்களின் யோசனைகள் மற்றும் அவர்களின் அனுபவங்களை பயன்படுத்துவது உங்களுக்கு போதுமானதாக இருக்காது. உங்கள் மூளையை கசக்கி பிழிந்து, ஆழமாக யோசித்து, உங்களுக்கான யோசனையை தேர்ந்தெடுக்க வேண்டும். இது என்னால் முடியாது என்று சாக்குபோக்கு சொல்வது உங்களுக்கு எப்போதும் உதவாது. ஆகையால், இன்று உங்களை மேம்படுத்திக் கொள்வதற்கான நேரம். எனவே, முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
சிம்மம் ராசிபலன்
வழக்கமான பரபரப்பான வாழ்க்கையில் சலித்து விட்டீர்களா? புதிய செயல்களைச் செய்ய இன்று ஒரு சிறந்த நாள் ஆகும். உங்களுக்கு நீண்ட நாட்கள் நன்மையை உண்டாக்கும் வாய்ப்புகளைப் பெற நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை புறக்கணித்து வருகிறீர்கள். உடலை ஆரோக்கியமாகவைத்துக்கொள்வதை உங்கள் குறிக்கோளாகக் கொள்ளுங்கள். நம்பிக்கையுடன் இருங்கள். மற்றவர்களின் ஆலோசனையைக் கேளுங்கள். அதுபிரச்சினைகளைச்சிறப்பாக எதிர்கொள்ள உதவும். உங்களைப் பற்றி நீங்கள் அதிக நம்பிக்கையுடன் இருப்பதாக நீங்கள் உணர்ந்தாலே உங்களதுநிறையப்பிரச்சினைகள் மறைந்துவிடும்.
கன்னி ராசிபலன்
நீங்கள் சமீபத்தில் சோம்பேறித்தனமாக விஷயங்களை செய்து கொண்டிருந்தீர்கள். இப்போது பரவாயில்லை. ஏனென்றால், உங்களிடம் ஏதோ மாற்றம் இருக்கிறது. நிறைய விஷயங்கள் நடந்திருக்கின்றன. சில நல்லதாகவும் மற்றவை அவ்வளவு நல்ல விஷயங்கள் இல்லாமலும் உள்ளன. இந்த நாள் மன அழுத்தம் மற்றும் பதற்றத்துடன் தொடங்கலாம். அனுபவம் வாய்ந்தவர்களுடன் பேசுவது அல்லது நண்பர்களிடம் நம்பிக்கை வைப்பது உங்கள் கவலையைப் போக்க உதவும். தியானம், யோகா அல்லது விறுவிறுப்பான நடைப்பயிற்சி கூட உங்களுக்கு நல்ல உற்சாகத்தைக் கொடுக்கும்.
துலாம் ராசிபலன்
உங்கள் உணர்வுகள் கட்டுப்பாடில்லாமல் இயங்குகின்றன. மேலும், நீங்கள் இதை கட்டுப்படுத்தியே ஆகவேண்டும். மனஅழுத்தம் என்பது உங்கள் சக்தியை பெருமளவில் வீணடிக்கும் ஒரு நிலை ஆகும். உங்கள் நிலையினை தாழ்த்தும் செயல்களை வேறுபடுத்தி, அதனை புரிந்துகொள்ளுங்கள். இது கடந்த காலங்களில், நீங்கள் மற்றவர்களுக்கு செய்த தவறுகள், அல்லது ஏமாற்றம் சார்ந்தவையாகக் கூட இருக்கலாம். அத்தகைய சிக்கல்களிலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பதை நீங்கள் கண்டறியுங்கள்.
விருச்சிகம் ராசிபலன்
உங்கள் பாதையை தவறவிடாதீர்கள். மேலும், தவறான தூண்டுதல்களிலிருந்து விலகிச் செல்வதற்கு கடுமையாக முயற்சி செய்யுங்கள். மனஅழுத்தத்தை ஏற்படுத்த முயலாதீர்கள். உங்கள் விடாமுயற்சிகுரிய உழைப்பு விரைவில் ஏற்றுக்கொள்ளப்படும். உங்களை சிக்கல்களுக்கு உள்ளாக்காத சில நல்ல நண்பர்கள், உங்களைத் தொடர்பு கொள்ளவர். இன்று, புதிய நிதி முதலீடுகள் அல்லது கடன் வழங்குவது குறித்து நீங்கள் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களது செலவுகளை மதிப்பிடு செய்வதற்கும், அதற்கேற்ப நிதியினை ஒதுக்குவதற்கும் இது ஒர் சிறந்த நாளாக இருக்கும்.
தனுசு ராசிபலன்
இந்த நேரத்தில் நீங்கள் மந்தமாக உணர்கிறீர்களா? நீங்கள் இரவு முழுவதும் செலவழித்து அந்த எண்ணங்களால் துயரப்பட்டிருப்பது தெரிகிறது. காதல் என்பது எங்கும் உள்ளது. ஆனால், அதற்காக நீங்கள் அவசரப்பட வேண்டாம். நீங்கள் கோபமானவர் என்று உங்கள் கூட்டாளியை உணர வைக்காதீர்கள். உங்கள் அன்புக்குரியவர்கள் மற்றும் நண்பர்களுடன்சகஜமாகப்பழகுங்கள். சில தாமதமான வாழ்த்துக்கள், அந்த விலைமதிப்பற்ற கவனம் தேவைப்படும் எவருக்கும், மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் உண்டாக்கும். விட்டுக்கொடுப்பது அவர்களை மகிழ்விக்கும்!
மகரம் ராசிபலன்
நீங்கள் மிகவும் நேசிக்கும் நபருக்கு ஒன்றைச் செய்வதாக உறுதி அளிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள், நீங்கள் அதை விரைவாகச் செய்ய முடியுமா என்று நினைக்கிறீர்கள், அதற்கான பதில் உங்களிடமே இருக்கிறது. ஆக்கப்பூர்வமான பணிகளை அட்டவணைப்படுத்திக் கொண்டு வேலை செய்யுங்கள், நீங்கள் ஓய்வாக இருக்கும் நேரத்தைக் குறையுங்கள், இது வேதனை நிறைந்த கடந்த கால நினைவுகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். இன்று நீங்கள் சோர்வாகக் காணப்படுவதற்கு அதிகளவிலான உழைப்பே காரணமாக இருக்கிறது. பணிகளுக்கான தகவல்களைக் கவனமாகத் தெரிந்து கொள்வது, பணிகளைத் தேவையான அளவிற்குச் சிறப்பாகச் செய்வது போன்றவையே நீங்கள் அதிகளவு வேலை செய்ய தூண்டுகிறது.
கும்பம் ராசிபலன்
சில விஷயங்கள் உங்களை வருத்தத்தில் ஆழ்த்தும். அந்த விஷயங்கள் உங்களுக்குள் தொடர்ந்து இருக்கின்றனவா? நீங்கள் இன்னும் அவற்றை உண்மையாக்க விரும்புகிறீர்களா? இன்று, உங்கள் உள்ளுணர்வு என்ன பேசுகிறது என்பதைக் கவனியுங்கள். அவர்கள்உங்களுக்குத்துரோகம் செய்ய மாட்டார்கள். உங்கள் எண்ணங்களுக்கு உங்கள் மனம்எப்படித்தீர்வுகளைத் தருகிறது என்று நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். நீங்களே அதிக பாதிப்புகளை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். தோல்விகளை ஏற்காதீர்கள். எழுச்சி கொண்டு வேலை செய்யுங்கள் அதிர்ஷ்டம் வெகு தொலைவில் இல்லை என்பதை நீங்கள் காண்பீர்கள்.
மீனம் ராசிபலன்
உங்கள் கடின உழைப்பு மற்றவர்களுக்கும்தெரியத்தொடங்கியுள்ளது. இது கண்டிப்பாக நல்லபலனைக்கொடுக்கும். வாழ்க்கை நீங்கள் நினைத்ததைவிடச்சிறந்தது என்று நீங்கள் உணர்கிறீர்கள். நீங்களே மிகவும் கடினமாக நபராக இருக்காதீர்கள். உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். பல விஷயங்கள் உங்களுக்குச் சாதகமாகச் செயல்படுகின்றன. இன்று, நீங்கள் சிறந்த புத்திசாலி போன்று செயல்படுவீர்கள். அதைஉங்களுக்குச்சாதகமாக மாற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு விருந்து தயாராக உள்ளது, எனவே அதற்குச் செல்லுங்கள்.
No comments:
Post a Comment