தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.520 உயர்வு - MAKKAL NERAM

Breaking

Friday, November 17, 2023

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.520 உயர்வு


 தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறது.


இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.520 உயர்ந்து ரூ.45,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,700-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


அதேபோல வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து ரூ.79.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment