அணில் சேமியா தயாரிப்பு ஆலைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு - MAKKAL NERAM

Breaking

Thursday, November 16, 2023

அணில் சேமியா தயாரிப்பு ஆலைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு

 


சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மளிகை கடையில் நுகர்வோர் வாங்கிய அணில் சேமியாவில் தவளை இறந்து கிடந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கலைவாணி தலைமையில் திண்டுக்கல் இ.பி.காலனி, செட்டிநாயக்கன்பட்டி, மேட்டுப்பட்டி, பாடியூர், லக்ஷ்மணபுரம் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் அணில் சேமியா தயாரிப்பு ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த அணில் சேமியா பாக்கெட்டுகளை தற்காலிகமாக விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.மேலும் தயாரிப்புக் கூடங்களில் கண்டறியப்பட்ட குறைபாடுகளை சரி செய்ய அறிவுறுத்தி அணில் சேமியா நிர்வாகத்துக்கு குறிப்பாணை வழங்கப்பட்டது. மேலும் அணில் சேமியா தயாரிப்பு ஆலையின் உற்பத்தி பொருள்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னை கிண்டி உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.அதன் முடிவுகள் கிடைத்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் கூறினர்.

No comments:

Post a Comment