கனமழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - MAKKAL NERAM

Breaking

Monday, November 13, 2023

கனமழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

 


தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.


இந்த நிலையில், கனமழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (14.11.2023) ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment