சல்யூட் அடிக்காததால் டிரான்ஸ்பர்..... வீடியோ வெளியிட்டு காவலர் கதறல்.... - MAKKAL NERAM

Breaking

Thursday, November 16, 2023

சல்யூட் அடிக்காததால் டிரான்ஸ்பர்..... வீடியோ வெளியிட்டு காவலர் கதறல்....

 


தொப்பி போட்டு சல்யூட் அடிக்கவில்லை என்பதற்காக தன்னை வேறு மாவட்டத்திற்கு டிரான்ஸ்பர் செய்து விட்டதாக வேதனை தெரிவித்துள்ள நெல்லையை சேர்ந்த காவலர் தமிழ்நாடு காவல்துறை சங்கம் அமைக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளார். தற்போது தூத்துக்குடியில் பணியாற்றி வருகிறேன் என்றும் தங்கள் குறைகளை கேட்க இங்கு யாரும் இல்லை எனவும் வேதனையுடன் கூறியுள்ளார்.


இது தொடர்பாக அவர் கூறுகையில் “அடிமட்ட காவலர்களுக்கு கீழ் ஒரு குழு அமைத்து விசாரணை செய்ய ஒரு சங்கம் அமைத்தால் நன்றாக இருக்கும். உயர் அதிகாரிகள் சுயநலவாதிகளாக தான் இருக்கிறார்கள். எங்கள் குறையை கேட்டு நிவர்த்தி செய்ய யாரும் இல்லை. தமிழ்நாட்டில் வேலை பார்க்கும் அனைத்து காவலருக்குமே எந்த ஒரு நிவாரணமும் தீர்வும் கிடையாது” எனக் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment