விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா மேட்டமலை கிராமத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் நவம்பர் 1 முன்னிட்டு நடந்த கிராம சபை கூட்டம் மேட்டமலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது,
சரியாக 10 மணிக்கு நடைபெற்றதாக ஊராட்சி மன்ற தலைவர் தகவல் தெரிவித்தார்.அரசு விதியின்படி கிராம சபை கூட்டமானது 11 மணி அளவில் அனைத்து பொதுமக்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்ட பின்பே நடைபெற வேண்டும்.
அதற்கு மாறாக நடந்துள்ளது இந்த கிராம சபை கூட்டம் மேலும் இந்த கிராம மக்கள் தொகை கணக்கின்படி அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின் படி குறைந்தது 100 நபர்களாவது கலந்து கொள்ள வேண்டும், அவ்வாறு நடந்தாலே அந்த கிராம சபை கூட்டம் ஆனது முழுமை பெறும்,அவ்வாறு அல்லாமல் அதற்கு மாறாக அப்பகுதி துப்புரவு பணியாளர்கள் மற்றும் 100 நாள் பணிதல பொறுப்பாளர்கள் என வெறும் 10 நபர்களை வைத்து ஊராட்சி மன்ற தலைவர் கிராம சபை கூட்டத்தை நடத்தி உள்ளதாகவும்,
ஒரு கிராம சபை நடைபெறுவதற்கு முன்பு ஏழு தினங்களுக்கு முன்பாகவே துண்டு பிரசுரங்கள் மற்றும் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்ற விதிமுறை உள்ளதாகவும், கிராம சபை கூட்டத்தின் விதிமுறைகளை பின்பற்றாமல் ஊராட்சி மன்ற தலைவரும் ஊராட்சி செயலாளரும் செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
மேலும் இந்த கிராம சபை கூட்டத்தையும் இதில் ஏற்றப்பட்ட தீர்மானங்களையும் அரசு விதிமுறைப்படி ரத்து செய்து மீண்டும் முறைப்படி கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment