போலிக் கடிதங்களை நம்ப வேண்டாம்..... தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை...... - MAKKAL NERAM

Breaking

Tuesday, November 14, 2023

போலிக் கடிதங்களை நம்ப வேண்டாம்..... தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை......

 


மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் (என்.எம்.சி) பெயரில் வெளியாகும் போலிக் கடிதங்களை நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையத்தின்  முதுநிலை மருத்துவக் கல்வி வாரியச் துணைச் செயலா் அஜேந்தா் சிங்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  ‘‘என்.எம்.சி முதுநிலை கல்வி வாரியத் தலைவர் விஜய் ஓஜா கையொப்பமிட்ட அங்கீகாரக் கடிதம் கிடைக்கப் பெற்றுள்ளதாக சில மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து தகவல் கிடைத்துள்ளது. 


அங்கீகாரம் புதுப்பித்தல் மற்றும் நீட்டித்தலுக்கான அனுமதி கடிதம் அனைத்தும் என்.எம்.சி-யின் அதிகாரபூா்வ மின்னஞ்சல் முகவரியில் மட்டுமே அனுப்பப்படும். அதேபோல, அது குறித்த விவரங்களும் விரைவு அஞ்சலில் மட்டுமே அனுப்பி வைக்கப்படும். இதைத் தவிர, தனிப்பட்ட முறையிலோ அல்லது வேறு வழிகளிலோ கிடைக்கப் பெறும் போலி அங்கீகாரக் கடிதங்களை நம்ப வேண்டாம்’’ என அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment