கோவில் கருவறைக்குள் பெட்ரோல் குண்டு வீசிய பக்தர் - MAKKAL NERAM

Breaking

Tuesday, November 14, 2023

கோவில் கருவறைக்குள் பெட்ரோல் குண்டு வீசிய பக்தர்

 


சென்னை பாரிஸ் கார்னர் பகுதியை சேர்ந்த முரளி கிருஷ்ணன் என்பவர் அதே பகுதியில் உள்ள வீரபத்ரா கோவிலுக்கு மது போதையில் சென்றுள்ளார். அங்கு கருவறையின் அருகே சென்ற முரளி கிருஷ்ணன் தனது வேண்டுதலுக்கு பதில் அளிக்கவில்லை என்று சத்தமிட்டுள்ளார்.


அதோடு கருவறையின் உள்ளே பெட்ரோல் குண்டையும் வீசியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார் முரளி கிருஷ்ணனை கைது செய்துள்ளனர். மேலும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் அந்த கோவிலுக்கு அடிக்கடி வருபவர் என்பது தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment