பாஜகவில் இருந்து விலகிய நடிகை விஜயசாந்தியின் அடுத்த நகர்வு என்ன? - MAKKAL NERAM

Breaking

Thursday, November 16, 2023

பாஜகவில் இருந்து விலகிய நடிகை விஜயசாந்தியின் அடுத்த நகர்வு என்ன?


 கடந்த 1997-ம் ஆண்டு பாஜகவில் இணைந்த விஜயசாந்தி, 2005-ம் ஆண்டு அந்த கட்சியில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார். இதன் பின் சந்திரசேகரராவின் டிஆர்எஸ் கட்சியில் இணைந்தார். 2009-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று எம்.பியான விஜயசாந்தி, 2014-ம் ஆண்டு திடீரென காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.


இதையடுத்து 2020-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இந்த நிலையில் தெலங்கானா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று விஜயசாந்தி நினைத்திருந்தார். ஆனால், அவருக்குப் போட்டியிட பாஜக வாய்ப்பளிக்காததால், மனவருத்தத்தில் இருந்தார்.


இந்நிலையில், பாஜகவில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக விஜயசாந்தி அறிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் விஜயசாந்தி நாளை இணைவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment