அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையில் மேலும் ஒரு சிக்கல் - MAKKAL NERAM

Breaking

Friday, November 17, 2023

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையில் மேலும் ஒரு சிக்கல்

 


அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உடல் நிலை குறித்த அறிக்கை வெளியாகி அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தீவிர தலைவலி, வாந்தி உள்ளிட்ட பிரச்சினையால் சென்னை புழல் சிறையில் இருந்து சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த புதன் கிழமை அழைத்து செல்லப்பட்டார். அவரை உடனடியாக பரிசோதித்த சிறப்பு மருத்துவக்குழு, மேல் சிகிச்சைக்காகவும், பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், அன்றிரவே ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு மாற்றினர்.


ஓமந்தூரார் மருத்துவமனையில், இதயவியல் துறையின் கீழ் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, 6வது தளத்தில் உள்ள தனி அறையில் சிகிச்சை அளிக்கப்பட்ட வருகிறது.


இந்த நிலையில் அவர் உடல்நிலை குறித்த அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. அதில், ‘’அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு பித்தப்பையில் கல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனைக் கரைப்பதற்கான சிகிச்சைகளை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளனர்.


மேலும் செந்தில்பாலாஜிக்கு ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளது. வயிற்றுப்புண் மற்றும் குடல்புண் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வரும் நிலையில் பித்தப்பையில் கல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தற்போது அதற்கான சிகிச்சையும் தொடங்கப்பட்டுள்ளன’’ என கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment