மிக்ஜம் புயல் நிவாரண நிதியாக ரூ.2 கோடி வழங்கியது ஹுண்டாய் நிறுவனம் - MAKKAL NERAM

Breaking

Tuesday, December 26, 2023

மிக்ஜம் புயல் நிவாரண நிதியாக ரூ.2 கோடி வழங்கியது ஹுண்டாய் நிறுவனம்

 


மிக்ஜம் புயல் மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை 2 நாட்கள் முடங்கும் வகையில் மழை பாதிப்பு ஏற்பட்டது.


இன்னும் பல இடங்களில் மழை நீர் வடியாததை அடுத்து பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ள பாதிப்பை தொடர்ந்து, பல்வேறு தனியார் நிறுவனங்கள், தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், உள்பட பலர் தமிழக அரசுக்கு நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.


இந்நிலையில், மிக்ஜம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக ரூ.2 கோடிக்கான காசோலையை ஹுண்டாய் மோட்டார் நிறுவனம் வழங்கி உள்ளது.


சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ஹுண்டாய் மோட்டார் நிறுவனத்தின் தலைமை உற்பத்தி அதிகாரி கோபால கிருஷ்ணன் மற்றும் நிறுவன தலைமை அதிகாரிகள்,ஜோங் ஹூன் லீ, டி.சரவணன் உள்ளிட்டோர் மிக்ஜம் புயல் பேரிடர் நிவாரணப்பணிகளுக்காக ரூ.2 கோடிக்கான காசோலையை வழங்கினர்.

No comments:

Post a Comment