பர்கூர் மலை கிராம ஊராட்சி சோழகனை கிராம மலைவாழ் மக்கள் உற்பத்தி செய்த கைவினை பொருள்கள் முதல் விற்பனையை அந்தியூர் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார் - MAKKAL NERAM

Breaking

Tuesday, December 26, 2023

பர்கூர் மலை கிராம ஊராட்சி சோழகனை கிராம மலைவாழ் மக்கள் உற்பத்தி செய்த கைவினை பொருள்கள் முதல் விற்பனையை அந்தியூர் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்


ஈரோடு மாவட்டம்,  அந்தியூர் சட்டமன்ற  தொகுதி அந்தியூரில்  மலைவாழ் மக்களின் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை மேளாநடைபெற்றது.

நபார்டு வங்கி நிதியுதவி உடன் அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் பர்கூர் மலை கிராம ஊராட்சி சோழகனை கிராமத்தில் 30 நபர்களுக்கு மூங்கில் மூலம் கைவினைப் பொருட்கள் உற்பத்தி செய்வது குறித்து திறன் பயிற்சி 15 நாட்கள் வழங்கப்பட்டு அவர்கள் உற்பத்தி செய்த கைவினைப் பொருட்கள் சந்தைப்படுத்தும் நோக்கத்தோடு  அந்தியூர் வார சந்தையில் வெளிப்புற அரங்கு அமைத்து கண்காட்சி மற்றும் விற்பனை மேளா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர்  அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம்   கலந்துகொண்டு மலைவாழ் மக்கள் உற்பத்தி செய்த கைவினைப் பொருட்களை பார்வையிட்டும் முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.உடன் அந்தியூர் ஒன்றிய அவைத் தலைவர் புட்டன்,அந்தியூர் பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் , பேரூராட்சி மன்ற துணை  தலைவர் பழனிச்சாமி ,முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் கவின்பிரசாத் ,  பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.



 மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment