சென்னை கடற்கரைப் பகுதியில் கடல் சீற்றம் - MAKKAL NERAM

Breaking

Sunday, December 3, 2023

சென்னை கடற்கரைப் பகுதியில் கடல் சீற்றம்

 


தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறுகிறது. இந்த புயலுக்கு 'மிக்ஜம்' என பெயரிடப்பட்டுள்ளது.


இந்த புயல் நாளை வட தமிழக கடலோர பகுதிக்கு நகர்ந்து 5-ம் தேதி நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் இன்று மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


இந்த நிலையில், புயல் எதிரொலியாக சென்னை காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர் கடற்கரைப் பகுதியில் கடல் சீற்றமாக காணப்படுகிறது.

No comments:

Post a Comment