கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு......
இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது. கிறிஸ்தவர்கள், கிறிஸ்து பிறப்பை மிகவும் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் தேவாலயங்கள் மின்னொலியில் ஜொலித்தன. ஆட்டு கொட்டகையில் இயேசு பிறந்ததை சித்தரிக்கும் வகையில் பெரும்பாலான தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப்பட்டு இருந்தது. வேளாங்கண்ணி தேவாலயம், சென்னை சாந்தோம் உள்பட அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்புப் பிரார்த்தனைகள் நடைப்பெற்றது.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்று நள்ளிரவு அனைத்து தேவாலயங்களிலும் கூட்டு திருப்பலி நடந்தது. இதில் குழந்தை இயேசுவின் சொரூபத்தை கையில் ஏந்தி இயேசு பிறப்பு அறிவிக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்தும், ஒருவருக்கொருவர் வாழ்த்துச் சொல்லியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி, பிரார்த்தனை ஆகியவை தொடர்ந்து நடந்து வருகிறது. கிறிஸ்தவர்கள் இந்நாளில் எளிய மக்களுக்கு உதவிகளையும் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
No comments