புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஒன்றியத்தின் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் பாலின பாகுபாடு, குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா அறிவுறுத்தலின்படி மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் ரேவதி ஆலோசனையின்படி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் பாலின பாகுபாடு, குழந்தைகள்,பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமி தலைமை வகித்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் ( ஊராட்சிகள் )முன்னிலை வகித்தார்.வட்டார இயக்க மேலாளர் ஜெயந்தி அனைவரையும் வரவேற்று பேசினார்.பின்னர் தொடங்கிய விழிப்புணர்வில் பெண் குழந்தைகள் தீயவர்களிடமிருந்து எவ்வாறு தற்காத்து கொள்வது,பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகள் சட்டம் (2012), குழந்தை திருமண தடுப்புச் சட்டம் 2006) பற்றியும், குழந்தைகள் பாதுகாப்பு எண் 1098 பெண்கள் பாதுகாப்பு எண்கள் 181 மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிப்பதற்கான உதவி எண் 14417 பற்றியும் மற்றும் வளரிளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து பாதுகாப்பு, பெண் உரிமைகளை பாதுகாப்பது, பாலின பாகுபாட்டைக்களைப்பது,குழந்தை திருமணம் தடுத்தல், பாலியல் துன்புறுத்தல், குழந்தை தொழிலாளர் வேலைக்கு அமர்த்துதல் உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை கையிலேந்தியேந்தி பேரணியாக சென்றனர்.மேலும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.இவ்விழிப்புணர்வில் வட்டார ஒருங்கிணைப்பாளர் உமாமகேஸ்வரி,லெட்சுமி பிரபா, சத்யா,புனிதா மேரி,சமுதாய சுய உதவி குழு பயிற்றுனர்,சமுதாய வள பயிற்றுனர், அங்கன்வாடி பணியாளர்கள்,மகளிர் சுய உதவி குழுவினர்,பெண்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இரா.பாஸ்கர் செய்தியாளர்
No comments:
Post a Comment