தேமுதிக நிறுவன தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மதுரையைச் சேர்ந்தவர். திரையுலகம் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக சென்னை சென்று திரையுலகில் நுழைந்து வெற்றிகரமான கதாநாயகனாக உயர்ந்த அவர் தென் இந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார்.
அரசியல் கட்சி துவங்கி தேமுதிகவை தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக சட்டசபையில் அமர வைத்தவர் விஜயகாந்த்.அப்படிப்பட்டவர் இன்று அதிகாலை மரணம் அடைந்த நிலையில் அவரது மறைவிற்கு மதுரை மக்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழக மக்களுமே கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை தேமுதிக தொண்டர்கள் தலைவரின் மரணத்திற்கு மொட்டை அடித்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment