புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ரெகுநாதபட்டி ஊ.ஒ.ஆ. பள்ளியில் பெற்றோர் மனசு பெட்டி திட்டம் வட்டார கல்வி அலுவலர்கள் பங்கேற்பு. ரெகுநாதபட்டி ஊ.ஒ.ஆ.பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் மனசு பெட்டி திட்ட திறப்பு நிகழ்விற்கு அப்பள்ளி தலைமையாசிரியர் நாகலெஷ்மி தலைமை வகித்தார்.வட்டாரக் கல்வி அலுவலர்கள் இராமதிலகம்,இலாஹி ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இடைநிலை ஆசிரியர் முத்துக்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.
பின்பு பெற்றோர் மனசு பெட்டி அமைக்கப்பட்டதற்கான நோக்கம் குறித்தும் பெற்றோர்கள் தங்கள் கருத்துகளை மனம் திறந்து பதிவு செய்த இத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது என்றும்.பெற்றோர் ஆசிரியர்களிடம் கூறமுடியாத விஷயங்களை :பெற்றோர் மனசு பெட்டியில்: தெரிவிக்கலாம் என்றும். இத்திட்டம் நல்ல தீர்வை ஏற்படுத்தும் என்றும் வட்டார கல்வி அலுவலர்கள் இராமதிலகம், இலாஹி ஜான் பெற்றோர் முன் பேசினார்கள்.இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மைக்குழு தலைவி பொன்னம்மாள்,வார்டு உறுப்பினர் சரீனா பேகம், பெற்றோர்கள், உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் பள்ளியின் சார்பில் மேலாண்மைக்குழு தலைவி பொன்னம்மாள் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இரா.பாஸ்கர் செய்தியாளர்
No comments:
Post a Comment