புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 36-வது நினைவு நாளையொட்டி எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு மலர் மரியாதை செலுத்தப்பட்டது.பொன்னமராவதி அதிமுக கட்சி அலுவலகம் மற்றும் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர் பிகே.வைரமுத்து அவர்களின் வழிகாட்டுதலின்படி அலங்கரிக்கப்பட்டிருந்த புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு அஇஅதிமுகவின் பொன்னமராவதி கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி கண்ணப்பன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செய்தனர்.
இந்நிகழ்விற்கு பொன்னமராவதி தெற்கு ஒன்றிய செயலாளர் ஆலவயல் சரவணன், பேரூர் கழக செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்நிகழ்வில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் வேந்தன்பட்டி பழனியப்பன், எம்.ஜி.ஆர் அணி மாவட்ட நிர்வாகி அம்மாபட்டி கணேசன்,மாவட்ட பொருளாளர் அம்பி,வர்த்தக அணி நிர்வாகி கல்லம்பட்டி கணேசன் ஒன்றிய கவுன்சிலர்கள் பழனிச்சாமி, பழனியப்பன் ,
ஒன்றிய வர்த்தக அணி ஆனந்த், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய தலைவர் தங்கம், ஒன்றிய செயலாளர் சிவராமகிருஷ்ணன்,அண்ணா தொழிற்சங்க நிர்வாகி ஆதிமுத்து, இலக்கிய அணி ஒன்றிய ஆண்டிக்காளை, ஆட்டோ சங்க நிர்வாகி முருகேசன்,கனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
இரா.பாஸ்கர் செய்தியாளர்
No comments:
Post a Comment