தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைக்கான காலம் இந்த ஆண்டு ஜனவரி வரை நீடித்துள்ளது. அதன் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இந்த சூழலில் அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்மேற்கு வங்கக் கடல், அதையொட்டிய பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலுக்கு மிக பலத்த மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூா், விழுப்புரம், கடலூர், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதில் அரியலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாத நிலையில், தற்பொது பெய்யும் மழை அந்த பற்றாக்குறையைத் தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment