சத்தியமங்கலத்தில் தேமுதிக மற்றும் அனைத்து கட்சிகள் சார்பில் கேப்டன் விஜயகாந்த்துக்கு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது - MAKKAL NERAM

Breaking

Sunday, January 7, 2024

சத்தியமங்கலத்தில் தேமுதிக மற்றும் அனைத்து கட்சிகள் சார்பில் கேப்டன் விஜயகாந்த்துக்கு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது


ஈரோடு மாவட்டம்,சத்தியமங்கலத்தில் மறைந்த தேசிய முற்போக்கு திராவிடக் கழக தலைவரும், திரைப்பட நடிகருமான விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக  தேமுதிக மற்றும் அனைத்து கட்சிகள் சார்பில் மௌன ஊர்வலம் மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக நூற்றுக்கும் மேற்பட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையத்திலிருந்து கடைவீதி வழியாக நகராட்சி வணிக வளாகம் வரை ஊர்வலமாக சென்றனர். இதைத்தொடர்ந்து நகராட்சி வணிக வளாகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்தின் திரு உருவப்படத்திற்கு தேசிய முற்போக்கு திராவிடக் கழக ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் பி.கே. சுப்பிரமணியன் தலைமையில் அனைத்து கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

இந்த நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் ஒன்றிய செயலாளர் கே.என். சஜித், சத்தி நகர  செயலாளர் எஸ் .கே.ராஜேந்திரன், சத்தி நகர அவைத்தலைவர்பங்க் பர்கத், நகர பொருளாளர் ரொட்டி ஆறுமுகம், நகர துணை செயலாளர் அமன்பாய், நகர மகளிர் அணி செயலாளர் சமீமா, முன்னாள் சத்தி நகர தலைவர் எஸ்.எம்.கணேசன், முன்னாள் சத்தி நகர செயலாளர் வே.தரணிமுருகன், பசீர், மகளிர் அணி ஆ.சாந்தாமணி,  சத்தி ஒன்றிய அவைத் தலைவர் எம்.கண்ணன், சத்தி ஒன்றிய பொருளாளர் வீ.ஆறுமுகம், டி. கணேசன், பாக்யா, சதுமுகை ஊராட்சி செயலாளர் குமார், பெரிய கொடிவேரி பேரூர் கழக செயலாளர் பெருமாள்,  ரவிவர்மா, கே.என்.பாளையம் ஈஸ்வரன், 

 அரியப்பம்பாளையம் அ.க.சற்குணன், அரியப்பம்பாளையம் பேரூர் கழக செயலாளர் பி .எம். வடிவேல், திமுக சார்பில் சத்தியமங்கலம் திமுக நகர செயலாளரும் ,  சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் ஆர் .ஜானகிராமசாமி, சத்தியமங்கலம் திமுக தெற்கு செயலாளரும் , சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர்  கே.சி.பி. இளங்கோ, தாசநாயக்கனூர் டி.சசிகுமார் ,  அதிமுக சார்பில் முன்னாள் சத்தியமங்கலம் நகராட்சி தலைவரும், சத்தி அஇஅதிமுக நகர செயலாளர் ஓ.எம்.சுப்பிரமணியம், காங்கிரஸ் சார்பில் ஆனைக்கொம்பு ஸ்ரீ ராம், பாமக மாவட்ட செயலாளர் ராஜா,திருத்தணிகாசலம், ஸ்டாலின் சிவகுமார்,  அமமுக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.சரவணகுமார், அமமுக மாவட்ட துணை செயலாளர் தங்கவேல், அமமுக சத்தி ஒன்றிய செயலாளர் எம்.ரவிக்குமார், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட எம். ஜி .ஆர் .மன்ற செயலாளர் ராஜா மாதவன், எஸ்டிபிஐ சார்பில் அப்துல் அஜீஸ், தபெதிக சார்பில் திராவிட வீரன் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள், தேமுதிக தொண்டர்கள் மற்றும் விஜயகாந்த் ரசிகர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். 


மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சத்தியமங்கலம் சிவன் மூர்த்தி.

No comments:

Post a Comment