பொன்னமராவதியில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா..... எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது...... - MAKKAL NERAM

Breaking

Wednesday, January 17, 2024

பொன்னமராவதியில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா..... எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது......


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் அஇஅதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. 

புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 107 வது பிறந்த நாளையொட்டி அஇஅதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளர் பிகே.வைரமுத்து அவர்களின் வழிகாட்டுதலின்படி பொன்னமராவதி கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி கண்ணப்பன் தலைமையில் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆலவயல் சரவணன், பேரூர் கழகச் செயலாளர் ராஜேந்திரன், ஆகியோர் முன்னிலை பொன்னமராவதி அதிமுக கட்சி அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆரின் திருவுருப்படத்திற்கு அதிமுக  நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செய்தனர்.மேலும் கழக கொடியேற்றியும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நாமம் வாழ்க என்ற முழக்கத்துடன் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்வில் அண்ணா தொழிற்சங்க தெற்கு மாவட்ட செயலாளர் வேந்தன்பட்டி பழனியப்பன்,மாவட்ட பொருளாளர் அம்பி, வர்த்தக அணி நிர்வாகி கல்லம்பட்டி கணேசன், ஒன்றிய துணை செயலாளர் ஏ.டி.எம் ராஜா,மாவட்ட எம்ஜிஆர் அணி நிர்வாகிகள் வார்பட்டு மலைச்சாமி, திருக்களம்பூர் ராஜமாணிக்கம், நெடுஞ்செழியன், ஒன்றிய கவுன்சிலர்கள் பழனியாண்டி,பழனிச்சாமி,பழனியப்பன்,சுந்தர்ராஜ்,நகர பொருளாளர் காரி.பழனியப்பன், கிழக்கு ஒன்றிய இணைச்செயலாளர் வேகுப்பட்டி முத்து உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டு எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர். அதேபோன்று பேருந்து நிலையம் அருகில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செய்தனர்.இந்நிகழ்வுகளில் கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் பெரமன், மாணவரணி தவசி,வடக்கு ஒன்றிய துணை செயலாளர் ரெங்கராஜ்,வார்பட்டு உதயகுமார், ஆட்டோ சங்க நிர்வாகிகள் ஆதிமுத்து,விவசாய பிரிவு ஒன்றிய நிர்வாகி ராமன், முருகேசன், ஆர்.எம்.சாமி, ஆண்டவர் செந்தில், முருகன், விஜய், நாகராஜ், சுப்பையா ,வார்ப்பட்டு பெரியய்யா,விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இரா.பாஸ்கர்  செய்தியாளர்


No comments:

Post a Comment