மேஷம் ராசிபலன்
புதிய செயல்களைச் செய்ய இன்று ஒரு சிறந்த நாள். அனைத்து விஷயங்கள் உங்களுக்குச் சாதகமாகச் செயல்படுவதாகத் தெரிகிறது, அதனால், நீங்கள் அதிக முயற்சி எடுக்கத் தேவையில்லை. நண்பர்களும், குடும்பத்தினரும் உங்கள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பார்கள். மேலும், குடும்ப விஷயங்களில் மகிழ்ச்சியுடனும், அமைதியாகவும் இருப்பீர்கள். நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை புறக்கணித்து வருகிறீர்கள். இன்று ஒரு புதிய நபராக மாறி, உங்கள் உடலை ஆரோக்கியமாகவும், உறுதியாகவும் வைத்துக் கொள்வதை இலக்காக வைத்துக் கொள்ளுங்கள். இன்றைய நாளில், நிறையப் பேரிடம் கலந்துரையாடி உள்ளீர்கள். புதிய யோசனைகளுக்கு உங்கள் மனதை தயாராக வைக்கவும்.
ரிஷபம் ராசிபலன்
இது ஒரு அற்புதமான பயணத்திற்கான நேரம், எனவே அந்த பயணத்திற்குக் கொண்டு செல்லும் பையை வெளியே எடுங்கள். இதை சிறியதாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இந்த பயணமானது எந்த ஒரு தொழிநுட்ப கருவிகளும் இல்லாத பயணமாக இருக்கட்டும்! இது நிச்சயமாக உங்களுக்கு வரவேற்கத்தக்க மாற்றமாக இருக்கும். மேலும், இது உங்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். உங்களது நீண்ட கால எதிரி உங்கள் உதவியை நாடுவார், அவருக்கு நீங்கள் உதவ வேண்டும். நீங்கள் செய்யும் உதவிகள் குறுகிய காலத்தில் உங்களுக்கு வெகுமதியைப் பெற்றுத் தரும்.

மிதுனம் ராசிபலன்
இன்று, உங்களது வாழ்க்கையில் நடந்துள்ள அனைத்து நல்ல விஷயங்களுக்காகவும் நன்றியோடு இருங்கள். உங்களுக்குள்ளேயும், மற்றவர்களோடும் சமாதானமாக இருங்கள். ஒழுக்கமோடு இருங்கள். மற்றவர்கள் உங்களை எந்த அளவிற்கு காயப்படுத்தினார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொண்டாலும், அவர்களை மன்னிக்கத் தயாராகுங்கள். ஆன்மீக உணர்வோடு இருப்பது உங்களுக்கு ஒரு நல்ல அனுபவமாக இருக்கும். மேலும், இந்த அனுபவத்தின் முடிவிலே நீங்கள் முழுத்திருப்தி அடைவீர்கள். உங்களது ஆன்மீக நலனுக்கு மன்னிப்பு அவசியம். எனவே, நீங்கள் உங்களுக்குள்ளும், மற்றவர்களுடனும் சமாதானம் செய்து கொள்ளுங்கள்.

கடகம் ராசிபலன்
சில விஷயங்கள் உங்களை வருத்தத்தில் ஆழ்த்தும். அந்த விஷயங்கள் உங்களுக்குள் தொடர்ந்து இருக்கின்றனவா? நீங்கள் இன்னும் அவற்றை உண்மையாக்க விரும்புகிறீர்களா? இன்று, உங்கள் உள்ளுணர்வு என்ன பேசுகிறது என்பதைக் கவனியுங்கள். அவர்கள்உங்களுக்குத்துரோகம் செய்ய மாட்டார்கள். உங்கள் எண்ணங்களுக்கு உங்கள் மனம்எப்படித்தீர்வுகளைத் தருகிறது என்று நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். நீங்களே அதிக பாதிப்புகளை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். தோல்விகளை ஏற்காதீர்கள். எழுச்சி கொண்டு வேலை செய்யுங்கள் அதிர்ஷ்டம் வெகு தொலைவில் இல்லை என்பதை நீங்கள் காண்பீர்கள்.

சிம்மம் ராசிபலன்
ஓயாமல் ரீங்காரமிடும் வண்டைப் போல, எதையாவது பேசிக்கொண்டே இருக்கும் அணுகுமுறை உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாது, மற்றவர்களின் தனியுரிமையை மதித்து நடந்து கொள்ளுங்கள். மற்றவர்களைப் பற்றி, தெளிவற்ற உள்ளுணர்ச்சி அல்லது வதந்திகளை நீங்கள் கேட்டால், அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். சந்தேகத்தின் பலனை நீங்கள் அவர்களுக்கு வழங்க வேண்டும். உங்கள் குடும்ப உறுப்பினர் நோய்வாய் பட்டு இருந்தால் அது உங்களுக்கு மனதில் கவலையை உண்டாக்கலாம். அவர்களைக் கவனித்துக் கொள்ளுங்கள், இப்போது உங்களது கவனிப்பு அவர்களுக்கு மிகவும் தேவைப்படும்.

கன்னி ராசிபலன்
உங்களை யாரோ பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். உங்கள் சிந்தனையற்ற செயல்கள் இன்று வெளிவரும் வாய்ப்புகள் உள்ளன. வெளிப்படையான, பாதுகாப்பான விஷயங்கள் இப்போது உங்களுக்குத் தெரியும். சுத்தமானகாற்றைச்சுவாசியுங்கள். மேலும், சுத்தமாக வாழுங்கள். நிச்சயமாக அது எளிதாக இருக்காது. ஆனால், இறுதியில் இது உங்களுக்கு சில நல்ல பெயரையும், நல்லெண்ணத்தையும் கொடுக்கும். வாழ்க்கையில் நீங்கள் எடுத்த முயற்சிகளுக்காக ஒருபோதும் வருத்தப்பட வேண்டாம்.

துலாம் ராசிபலன்
ஒரு நேர்மறையான நபரான நீங்கள், ஏதாவது ஒன்றை இழப்பதை உண்மையிலேயே வெறுக்கிறீர்கள். வாழ்க்கையைப் பொறுத்தவரைக்கும், நீங்கள் சிலசமயம் வெற்றி பெறுகிறீர்கள். சிலசமயம் தோல்வியுறுகிறீர்கள்! உங்களது வெற்றியோ அல்லது ஏதாவது ஒன்றை செயல்படுத்தும் உங்கள் செயலோ, உங்கள் திறன்களை தீர்மானிக்க விடவேண்டாம். உங்கள் ஆற்றலும், அழகும் இன்றைய சிக்கல்களை சரிசெய்ய உதவும். ஒருவேளை, நீங்கள் இதனை கடுமையாக எடுக்காவிட்டாலும், நீங்கள் இருதரப்பினருக்கு இடையே ஒரு மத்தியஸ்தராக செயல்பட வேண்டியிருக்கும். கவலை உண்மையில் உங்களை மென்மேலும் பயமுறுத்தியுள்ளது. எப்போதும் உங்கள் உற்சாகத்தைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள். அதிகம் கவலைப்படுவதற்கும் அதன் மூலம் உங்கள் நாட்களை இழப்பதற்கும் பதிலாக, எந்த செயல்கள் நடந்தாலும் அவற்றைக் அதன் வழியிலே கையாள்வதைத் கற்றுக்கொள்ளுங்கள்.

விருச்சிகம் ராசிபலன்
எப்போதும் நீங்கள் வேலையைப் பற்றியோ அல்லது விளையாட்டைப் பற்றியோ சிந்திப்பதில்தான் கவனம் செலுத்துகிறீர்கள். ஏதாவது ஒன்றை குறித்து மட்டுமே அதிதீவிரத்துடன் அணுகும் முறை ஆரோக்கியமான நடைமுறை அல்ல. மேலும், நீங்கள் உங்களது தற்போதைய வாழ்க்கை முறையை மாற்றியமைப்பதைக் கருத்தில் கொண்டு, அதை இன்னும் சமச்சீரானதாக மாற்ற வேண்டும். இன்றைய சூழலில், நீங்கள் ஏதாவது ஒன்றைப் பற்றிய உங்கள் மாறுபட்டக் கருத்தை கொண்டுள்ள போதோ அல்லது அதுபற்றி சந்தேகிக்கத் தொடங்கும் போதோ, நீங்கள் உங்கள் எண்ணங்களைப் போலவே வலிமையானவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆகவே, இன்றைக்கே உடனடியாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. பின்பு, அவற்றிற்காக வருத்தப்படுவதை விட, இப்போதே செய்யுங்கள்.

தனுசு ராசிபலன்
உங்கள் மனதில் சில விஷயங்கள் உள்ளன. உங்கள் மனதில் உள்ளதை அடையும் வரை நீங்கள் ஓயமாட்டீர்கள். கவனம் செலுத்துவது நல்லது என்றாலும், உங்கள் தனிப்பட்ட குறிக்கோள்களையோ அல்லது தனிப்பட்ட வாழ்க்கையையோ முழுமையாக கட்டுக்குள் வைத்திராமல் இழப்பது நல்லாலோசனை ஆகாது. இந்த நாள், உங்களுக்கு சமநிலையினைக் கொண்டதாக இருக்கும். உங்களது வேலைக்கும், தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையில் நீங்கள் ஒரு சமநிலையை ஏற்படுத்த வேண்டும். நீங்கள் உங்கள் உடலைப் புறக்கணித்து வருகிறீர்கள். இது நிச்சயமாக உங்கள் உடல்நலத்தை பாதிக்கிறது.

மகரம் ராசிபலன்
உங்கள் வசீகரமும், நேர்மறை சிந்தனையும் ஒருவரின் நாளை உற்சாகப்படுத்தக்கூடும். மேலும், அது ஒவ்வொரு நாளிலும் மிகச் சிறந்ததைச் செயல்படுத்த அவர்களுக்கு ஒரு புதிய காரணமாக அமையும். எனவே, உங்கள் நேர்மறையான உணர்வினைத் தொடருங்கள். உங்கள் கவர்ச்சியும் நேர்மறையும் ஒருவரின் நாளை உற்சாகப்படுத்தக்கூடும். மேலும், ஒவ்வொரு நாளும் மிகச் சிறந்ததைக் காட்ட அவர்களுக்கு ஒரு புதிய காரணத்தைக் கொடுக்கும். எனவே உங்கள் நேர்மறையான உணர்வைத் தொடருங்கள். இத்தகைய நேரத்தில், நீங்கள் ஒரு குறிப்பிட்ட நபரைக் கவர்ந்திழுக்க முயற்சித்தீர்கள். அதேசமயத்தில், உங்களது நல்ல மற்றும் கஷ்ட காலங்களில் உங்களுடன் துணை நின்ற சில நபர்களை நீங்கள் கவனிக்கவும், மதிக்கவும் தவறிவிட்டீர்கள்.

கும்பம் ராசிபலன்
சவால்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகும். எனவே, அவற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ளும் சரியான தருணம் இதுவாகும். தைரியமாக இருங்கள். மேலும், தீர்வுகளைக் கண்டறிய முயலுங்கள். இது உங்களுக்கு ஏன் நேர்ந்தது என அங்கலாய்த்துக் கொள்வதில் எந்த பயனும் இல்லை! எனவே, இன்று முதல், சரியான அளவில் உடற்பயிற்சி செய்து, ஆரோக்யமான உணவை உட்கொள்ளுங்கள். அச்சமின்றி இருங்கள். உங்களது முதுகுக்குப் பின்னால், புறம்கூறுபவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கவலைப்படாதிருங்கள். விமர்சனங்களை எளிதான மனதுடன் எடுத்துக்கொள்ளுங்கள்.

மீனம் ராசிபலன்
உங்களது கண்கள் உங்களை வழிநடத்தும் விஷயைங்களில் சிறப்பு கவனத்தை செலுத்துங்கள். சில முக்கியமான விஷயங்கள் விரும்பத்தகாதவை என்பதால், அவற்றை நீங்கள் புறக்கணிக்க கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் பரிந்துரைகள் கேட்கப்படும் போது, தைரியமாக கருத்துக்களை எடுத்துரையுங்கள். இந்த பயிற்சியானது உங்கள் தடைகளை தகர்த்தெறிய உதவும். அது உங்களை மேலும் உறுதியடையச் செய்யும். இன்று, உங்களது ஆற்றலை யதார்த்தமான குறிக்கோள்களில் கவனம் செலுத்துவதற்கு தெரிவு செய்யுங்கள். இன்று, நல்லவற்றை செய்வதற்கான வாய்ப்பை நீங்கள் பெறலாம்.
No comments:
Post a Comment