புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணமேல்குடியில் வட்டாட்சியர் ஷேக்அப்துல்லா தலைமையில் கலைமகள் கலைக்குழுவினரால் மது அருந்துதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் மற்றும் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியில் போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து ஆடல் பாடலுடன் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்வில் கோட்டக்கலால் அலுவலர் ராஜாராம் மோகன்ராவ், துணை வட்டாட்சியர் முத்துக்கனி, பாலமுருகன் வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கோட்டக்கலால் வருவாய் ஆய்வாளர்கள் காமராஜ், வினோத்குமார், முத்தரசு, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment