மேஷம் ராசிபலன்
யாரோ ஒருவர் உங்களுக்குத் துரோகம் இழைத்திருக்கலாம், அவர்களின் நடத்தையால் நீங்கள் மிகவும் வேதனைப்பட்டு இருக்கலாம் அல்லது அதிர்ச்சி அடைந்து இருக்கலாம் . ஆனால், இந்த துரோகத்திலிருந்து நீங்கள் நன்கு பாடம் கற்றுக் கொள்ள வேண்டுமே தவிர, அந்த துரோகத்தை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டே இருக்கக் கூடாது. நீங்கள் கஷ்டங்களை எதிர்கொள்ளும்போது உங்கள் குடும்பமே உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். இன்று உங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தத் தயங்க வேண்டாம். ஒருவேளை அந்த நபருக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்க நீங்கள் விரும்பினால், அந்த வாய்ப்பை வழங்குங்கள், ஆனாலும், மனக்கண்ணால் தொடர்ந்து அவரை கண்காணித்துக் கொண்டே இருங்கள்.
ரிஷபம் ராசிபலன்
உங்கள் இருப்பிடத்திற்கும், பணிக்கும் இடையே அல்லல் பட்டுக்கொண்டிருகிறீர்கள். இது உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் அண்மையில் நீங்கள் உங்கள் வேலையைச் செய்யத் தொடங்கியுள்ளீர்கள். உங்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியம் ஆபத்தில் உள்ளது. பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் ஒரு எச்சரிக்கையாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை, உங்களுக்கு உதவியாக இருந்தவர்கள் யாரேனும் இருந்தால், அவர்களுடன் நீங்கள் செலவிட்ட நேரங்களுக்காக, அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள், அவர்களுடன் நீங்கள் செலவிட்ட நேரங்களை எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தீர்கள் என்பதற்கு இதுவே சாட்சியாகும். உங்களது கனிவான செயல்கள் உங்களுக்கு நல்ல எண்ணத்தை உண்டாக்கும்.

மிதுனம் ராசிபலன்
நல்லிணக்கம் இன்று உங்களுக்கு நல்ல நன்மைகளை உண்டாக்கும். கோபத்தையும், விரக்தியையும் உங்கள் மனதிலேயே அடக்கி வைக்காதீர்கள். மன்னிப்பு கேட்பது உங்களை நல்லமனநிலைக்குக்கொண்டு வரும். எப்போதும் ஆரோக்கியமானஉணவுகளைச் சாப்பிட வேண்டுமா?அந்தபழக்கத்தை இப்போதே தொடங்குங்கள். அது உங்கள் வாழ்க்கை முறையுடன் ஒன்றியதாக இருக்க வேண்டும். தியானம் அல்லது யோகா போன்றவை கூட உங்களுக்கு நல்ல மனஅமைதியைக்கொடுக்கும். இதுபோன்ற மன அமைதி கொடுக்கும் செயல்களில் ஈடுபட இன்று சிறிது நேரம் செலவிடுங்கள்.

கடகம் ராசிபலன்
நீங்கள் பொறுமையின்றி இருப்பதாக உணர்கிறீர்களா? நீங்கள் வேகமாக முடிவெடுப்பது,உங்களைப்பாதிக்கலாம். அவசர முடிவுகளின் போது எச்சரிக்கையாக இருங்கள். முடிவு எடுப்பதற்கு முன்பு நீங்கள் நடத்தும் ஒரு சிறிய ஆலோசனை உங்களுக்கு நல்லது செய்யும். இதன் மூலம் நீங்கள் புதிய எண்ணங்களைப் பெறலாம். மேலும், ஊக்கமளிக்கும் நண்பர்கள் சரியானவழியைக்காட்டலாம். நல்ல பலனைப் பெற முயற்சி செய்யுங்கள். உங்கள் புதுமையான முயற்சிகள், சிறந்த முடிவுகளுக்கு வழிவகுக்கும்.

சிம்மம் ராசிபலன்
இன்று, உண்மையை மட்டுமே பேசுங்கள். ஆனால், நீங்கள் இதை முழு மனதுடனும், அன்புடனும் செய்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் ஒருவரிடம் ஆழமாகக் கவரப்பட்டு இருந்தால், உங்கள் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறப்பதை உணர்வீர்கள். அந்த நபரால் நீங்கள் அதிகளவில் கவரப்பட்டு உள்ளீர்கள் என்பதற்கு இதுவே போதுமான சான்று. உங்கள் காதல் உறவை ஒரு படி மேலே கொண்டு செல்ல விரும்புகிறீர்களா? பயணத்தைத் திட்டமிடுவது ஒரு சிறந்த யோசனை. ஆனால், அதை உண்மையாக்குவதற்கு நீங்கள் அதிகம் உழைக்க வேண்டும்.

கன்னி ராசிபலன்
இந்த நாள் மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் கொண்டு வந்துள்ளது. இதைப் போக்க அனுபவம் வாய்ந்தவர்களுடன் பேசுங்கள் அல்லது நண்பர்கள் மீது நம்பிக்கை வைப்பது உங்கள் கவலையைப் போக்க உதவும். உங்களது அளப்பரிய ஆற்றலை சில நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்துங்கள். தியானம், யோகா அல்லது விறுவிறுப்பான நடைப்பயிற்சி கூட உங்களுக்கு நல்ல உற்சாகத்தைத் தரும். சுறுசுறுப்பாக இருப்பது, உங்களைப் பற்றி நீங்களே நன்றாக உணர வைக்கும். வீட்டிலும், பணியிடத்திலும் உங்கள் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும்.

துலாம் ராசிபலன்
நீங்கள் உற்சாகத்தோடும், ஆர்வத்தோடும் உள்ளீர்கள். திடீரென, உங்களது நீண்ட நாளைய கனவுகள் மறைந்துவிட்டன. மேலும், பலவற்றைச் செய்து முடிக்க நீங்கள் ஆயத்தமாகிறீர்கள். நீங்கள் மீண்டும் ஒருபோதும் காலம் தாழ்த்த வேண்டாம். இருப்பினும், அந்த செயல்களை முடிந்தவரை விரைவாகச் செய்யுங்கள். நீங்கள் குறிக்கோள்களை வரையறுத்துள்ளீர்கள். மேலும், அதை நிறைவேற்ற உழைப்பதில் மகிழ்ச்சியடைகிறீர்கள். நீங்கள் அவசரகதியில் செய்யும் தெரிவுகளைத் தவிர்க்கவும். அப்படி அவசரகதியில் தெரிவு செய்யப்பட்டவை தான், பின்னர் உங்களை உறுதியாக வருத்தப்பட்டு புலம்ப வைத்துவிடும்.

விருச்சிகம் ராசிபலன்
உங்கள் மீதே உங்களுக்குச் சந்தேகம் ஏற்படுவது இன்று உங்களுக்குப் பெரிய பிரச்சனையாக இருக்கலாம். உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயங்களைச் செய்யத் திட்டமிடுங்கள். பிரம்மை மற்றும் பயத்தை உங்கள் வாழ்க்கையிலிருந்து வெளியேற்ற வேண்டும். உங்களால் முடிந்த அளவுக்கு நல்ல மனப்பான்மையுடன் இருப்பதையே உங்களைச் சுற்றியுள்ளவர்களும் விரும்புகிறார்கள். இது உங்களுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தால், அதனால் நீங்கள் ஆச்சரியப்பட வேண்டாம்.

தனுசு ராசிபலன்
மோசமான அணுகுமுறையை விட்டுவிட்டு, உங்கள் பின்னால் இருப்பவர்கள் யாரும் உங்களை ஏமாற்றாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உங்களை வீழ்த்த யாரோ ஒருவர் வெளியே காத்துக் கொண்டிருக்கிறார். மற்றவர்களை மகிழ்விக்கும் உங்கள் தன்மை உங்களைச் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது. இன்று நீங்கள், உங்கள் ஆற்றலைப் பயன்படுத்தும் வகையில் வைத்துக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை மறந்து விட்டு, நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். புத்திசாலித்தனமாகப் பேசுங்கள், எந்த முடிவு எடுக்காமல் செயல்படத் தொடங்குங்கள், உங்கள் திருமணத்திற்குப் பிறகு ஒரு பிரகாசமான திருப்பம் கிடைக்கும் என்று தெரிகிறது.

மகரம் ராசிபலன்
உங்கள் படைப்பு ஆற்றல் பெரியளவில் வெளிப்படும். மேலும், உங்கள் படைப்பாற்றல் இன்று மற்றவர்களை வெகுவாக ஈர்க்கும். நீங்கள் முக்கியமானகாரியங்களைச்செய்வதில் திறமையானவராக இருப்பீர்கள். முழுமையாக உங்கள்திறமையாகச்செயல்படுத்தப்பலவிஷயங்களைக்கூர்ந்து கவனியுங்கள். செய்ததவற்றுக்காகமற்றவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.ஆணவம்காரணமாக மன்னிப்புகேட்காமலிருந்துவிட வேண்டாம். இது நிச்சயமாக மிகவும் முக்கியமானதாக இருக்கும். அன்பான வார்த்தைகளைப் பேசுவது நிச்சயமாக இன்று உங்களுக்கு உதவும்.அன்பாகப்பேசுவது, இந்த நாளில் நன்மைகளை உண்டாக்கும்.

கும்பம் ராசிபலன்
இந்த நேரத்தில் உங்கள் வாழ்க்கையில் உண்டாகும் கவனச்சிதறல்களால் உங்கள் பணி சற்று பாதிக்கப்பட்டு இருக்கலாம். ஆகவே, அதைச் சரி செய்ய இன்று முதல் முயற்சி செய்யுங்கள். உண்மையில் எந்த செயலில் ஆர்வம் உள்ளது என்பதைக் கண்டுபிடித்து அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். நீங்கள் பல திறமை வாய்ந்தவர் என்பது உண்மைதான் என்றாலும், உங்கள் வெற்றிக்கான தடைகளைக் கண்டுபிடித்து, அவற்றை மேம்படுத்த மட்டுமே உங்கள் நேரத்தையும் முயற்சியையும் செலவிடுங்கள்.

மீனம் ராசிபலன்
நீங்கள் புத்திசாலித்தனமாக இருக்கிறீர்கள். அவ்வாறு இருப்பது, நீங்கள் வெற்றிக் கோப்பைக் கொண்டு அக்களிக்கும் போது உங்களுக்குத் தெரிய வரும். உங்கள் இலக்கை அடைய நீங்கள், தடையாக இருக்கும் எந்த ஒரு சிறிய தடையையும் கூட கண்டுபிடித்து அதை வெளியே எடுத்து எறிந்து விடுவீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறீர்கள். நீங்கள் மிகவும் திறமையாகவும் பாராட்டத்தக்க விதத்திலும் ஏதாவது செய்கிறீர்கள்! உங்களுக்கு இன்று சில உதவிகள் தேவைப்படலாம் அல்லது நிபுணர் ஆலோசனை தேவைப்படலாம். உங்களுக்கு எல்லாம் தெரிந்து இருக்கிறது என்று நீங்கள் நினைத்தாலும் கூட, அனுபவம் வாய்ந்தவர்களிடமிருந்து வரும் நல்ல ஆலோசனையைக் கேட்டுக் கொள்ளுங்கள், கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலனைத் தரும். உங்களது முயற்சிகள், குறுகிய காலத்தில் பாராட்டைப் பெறப் போகின்றன.
No comments:
Post a Comment