புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.இந்த போட்டியை தமிழர் தேசம் கட்சி நிறுவன தலைவர் செல்வக்குமார் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
இந்த போட்டியில் பெரிய மாடு, நடு மாடு, கரிச்சான் மாடு என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 74 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
மாட்டு வண்டிகள் ஜோடிகள் போட்டி போட்டுக் கொண்டு துள்ளிக்குதித்து ஒன்றையொன்று முந்தி சென்றது பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. பெரிய மாடு பிரிவில் முதல் பரிசாக சீவலப்பேரி, இரண்டாவது பரிசாக மாவூர், மூன்றாவது பரிசாக பேராவூரணி, நான்காவது பரிசாக எஸ்பி பட்டினம் மற்றும் மதுரையை சேர்ந்த மாட்டு வண்டிகள் வெற்றி பெற்றன.
போட்டியைக்காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் சாலை நெடுகிலும் இரு புறங்களிலும் கண்டு ரசித்தனர்.மேலும் இந்த பந்தயத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு ரூபாய் 2 லட்சத்து 52ஆயிரம் ரொக்கப் பரிசும், கோப்பைகளும் வழங்கப்பட்டது. மணமேல்குடி காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment