இந்த நிகழ்ச்சியானது வெள்ளிக்கிழமை 09:2:24 இரவு 12 மணி அளவில் நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டம்,மணமேல்குடி தாலுகா மாந்தாங்குடி கிராமத்தில் அக்னி காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் வாரந்தோறும் செவ்வாய் வெள்ளி ஞாயிற்றுக்கிழமைகளில் அருள்வாக்கு நடைபெறும்.இன்று தை அமாவாசை என்பதால் இந்த அக்னி காளியம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும் அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது.
இதில் பூசாரி மாரிமுத்து காளி வேடமடைந்து கையில் தீ சட்டி சுமந்து சாமியாடி பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.அப்போது எரியும் நெருப்புக் கட்டையை எடுத்து வாயில் கடித்தும் அக்னிகிழங்கை விழுங்கியும் பக்தர்களை வியப்பில் ஆழ்த்தினார்.தொடர்ந்து நெருப்பு கட்டையை தனது இரு கால்களிலும் தேய்த்துக் கொண்டு பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார்.
திருமணவரன், குழந்தைவரன்,சுமங்கலிபாக்கியம் வேண்டி இத்திருக்கோவிலுக்கு ஆண்டுதோறும் தை அம்மாவாசை அன்று நடைபெறும் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு விளக்கு பூஜை செய்தனர்.
No comments:
Post a Comment