நாகையில் காங்கிரஸ் கமிட்டியினர் வருமான வரித்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம் :அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும் இளைஞர் காங்கிரஸ் கமிட்டி வங்கி கணக்குகளை செயல்படாமல் முடக்கிய அதிகார போதை கொண்ட மதவாத பாசிச மோடி அரசின் வருமான வரித்துறையை கண்டித்து நாகப்பட்டினம் நடுவர் கீழவீதியிலுள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் மாவட்டத் தலைவர்~வழக்கறிஞர் ஆர்.என்.அமிர்தராஜா தலைமையில் நடைபெற்றது.
கண்டன ஆர்பாட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் யூசுப் மாலிம்,மாவட்ட பொதுச் செயலாளர் ஏ.தெய்வானை,நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் உதயசந்திரன் நகர காங்கிரஸ் நகராட்சி தலைவர் எஸ்.முகமது நத்தர்,மாவட்டச் செயலாளர் எம்.முகமது அலி ஜின்னா,திருமருகல் வடக்கு வட்டாரத் தலைவர் பி.ஜீவானந்தம்,மாவட்டச் செயலாளர் உ.காமராஜ்,மண்டல் தலைவர்கள் குருக்கத்தி முகமது ஃபாரூக்,கூத்தூர் பாரூக்,மாரியப்பன் வர்த்தக காங்கிரஸ் துணைத் தலைவர் விக்னேஷ்,மூத்த தலைவர் என்.சி.ரவி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்
நாகை மாவட்ட நிருபர்
க.சக்கரவர்த்தி
விளம்பர தொடர்புக்கு
9788341834
No comments