பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசனுக்கு பொறுப்பு வழங்கிய காங்கிரஸ்
பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தமிழக காங்கிரஸ் கட்சியில் பதவி வழங்கப்பட்டுள்ளது.பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசனுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடக தொடர்பு துறை தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடக தொடர்பு துறை தலைவராக கோப்பண்ணா இருந்து வந்தார்.ஊடக விவாதங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆனந்த் சீனிவாசன் பங்கேற்று வந்தார். இந்நிலையில், ஆனந்த் சீனிவாசனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஊடக தொடர்புதுறை தலைவராக மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் நியமித்துள்ளார்.
No comments