உடை எனது சுதந்திரம்..... அறிவு இல்லாதவங்க தான் இப்படியெல்லாம் விமர்சனம் செய்ய முடியும் - பாடகி ராஜலட்சுமி டென்ஷன் - MAKKAL NERAM

Breaking

Saturday, February 10, 2024

உடை எனது சுதந்திரம்..... அறிவு இல்லாதவங்க தான் இப்படியெல்லாம் விமர்சனம் செய்ய முடியும் - பாடகி ராஜலட்சுமி டென்ஷன்

 


பிரபலங்கள் எந்தவொரு விஷயம் செய்தாலும் அதற்கு பாராட்டு கிடைப்பது போலவே, எதிர்மறை விமர்சனமும் வருவதுண்டு. அப்படியான ஒரு விஷயத்துக்குத்தான் பாடகி ராஜலட்சுமி பதிலடி கொடுத்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் ராஜலட்சுமி- செந்தில் கணேஷ் தம்பதி.


இந்த பிரபல்யம் அவர்களை சினிமாவுக்கும் எடுத்துச் சென்றது. சினிமாவில் பின்னணிப் பாடல்கள், தனி ஆல்பம், யூடியூப் சேனல் என பிஸியாக வலம் வந்தது இந்த ஜோடி. பின்பு, ‘லைசன்ஸ்’ என்ற படத்தின் மூலமாக ராஜலட்சுமிக்கு கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பும் வந்தது. இவர்கள் வெளிநாடுகளிலும் இசைக்கச்சேரிகள் செய்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது நியூயார்க்கில் இசைக் கச்சேரிக்காக சென்றுள்ளது ராஜலட்சுமி- செந்தில் கணேஷ் ஜோடி.


அங்கிருந்தபடியே இசைக்கச்சேரி குறித்தான தனது அனுபவம் குறித்து ஆங்கிலத்தில் ஒருவருடன் உரையாடும்படியான வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருக்கிறார் ராஜலட்சுமி. அதைப் பார்த்த பலரும், ‘வசதி வந்த உடனே வாயில் தமிழ் வர மாட்டிங்குது’ என்றும் ‘பாலா போல உதவி செய்யுங்கள், வசதி வாய்ப்பு வந்ததும் இப்படி பண்றீங்களா?’ என்றும் கமெண்ட்டில் நெகட்டிவாக பேசி இருந்தார்கள்.


இதற்குதான் ராஜலட்சுமி தற்போது பதிலடி கொடுத்திருக்கிறார். இதுகுறித்து ராஜலட்சுமி தனது பதிவில், ‘ஆங்கிலம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது எனக்கு பெரிய கனவாக இருந்தது. அந்த விருப்பம் காரணமாக நான் கொஞ்சம் கொஞ்சமாக கத்துக்கிட்டு இருக்கேன். ஆனால், அதுக்கு அவ்வளவு நெகட்டிங் கமெண்ட்ஸ் வந்துள்ளது.


அறிவு இல்லாதங்க தான் இப்படியெல்லாம் விமர்சனம் செய்ய முடியும். நான் ஆங்கிலம் பேசியதை மட்டுமல்லாது நான் அணிந்திருந்த உடையைப் பற்றி கூட விமர்சித்திருந்தனர். உடை என்பது எனது சுதந்திரம். எனக்குப் பிடித்த உடையை நான் எங்கு வேண்டுமானாலும் போட்டுக் கொள்வேன். பாடி ஷேமிங் செய்வதை பிற்போக்குத்தனமாகவே நான் பார்க்கிறேன். நெகட்டிவ் கமென்ட்ஸ் வந்தாலும் நான் பாசிட்டிவாகவே இருக்கிறேன்’ என்று சொல்லி இருக்கிறார்.

No comments:

Post a Comment